கோலாலம்பூர், நவ.4
14ஆவது பொதுத் தேர்தலில் வாக்குறுதி அளித்ததை போன்றே 10 ஆண்டுகளில் 10 லட்சம் வாங்கக்கூடிய வீடுகளை அரசு நிர்மாணிக்கும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளிப்பது எளிதானது. ஆனால் அதனை நிறைவேற்றுவது எளிதானதல்ல. ஒருசில வீடுகளைப் பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும் என்பதால் 10 லட்சம் வாங்கக்கூடிய வீடுகளை நிர்மாணிப்பதில் அரசுக்கு சந்தேகமாக இருக்கிறது. அதிலும் 10 லட்சம் என்பது மிகவும் பெரிய எண்ணிக்கையாக இருந்த போதிலும் இது அரசின் வாக்குறுதியாக இருப்பதால் 10 லட்சம் வீடுகள் 10 ஆண்டுகளில் நிர்மாணிக்கப்படும் என எகோ வோல்ட் கேலரியில் என் வீட்டு நிதித் திட்டத்தைத் தொடக்கி வைத்து போது தமதுரையில் மகாதீர் குறிப்பிட்டார்.
இதனிடையே, வசதி குறைந்தவர்களும் வீடு வாங்கும் வகையில் வீடுகளின் விலையைக் குறைக்க முடியாது என மகாதீர் குறிப்பிட்டார்.
இதற்கு முக்கியக் காரணம் வீடு வாங்குவோருக்கு ஏற்றாற் போல் அவற்றின் விலை இல்லாததே ஆகும். இதன் அடிப்படையில் மலேசியர்களில் பெரும்பாலானோர் தங்களின் முதல் வீட்டைக் கொண்டிருக்கும் வகையில் இந்த நிதியுதவித் திட்டத்தை அரசு ஏற்படுத்தி இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
மக்கள் வாங்கக்கூடிய வீடுகளில் அவர்கள்தான் குடியிருப்பார்கள் என்பதால் அதுபற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.