வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஒற்றுமை-ஒருமைப்பாடு, அனைவரின் கடப்பாடு – பொன்.வேதமூர்த்தின் நிலைப்பாடு
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒற்றுமை-ஒருமைப்பாடு, அனைவரின் கடப்பாடு – பொன்.வேதமூர்த்தின் நிலைப்பாடு

கோலாலம்பூர், டிச. 6

நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் தரப்பினரிடமும் ஒற்றுமை உணர்வும் ஒருமைப்பாட்டு சிந்தனையும் மேலோங்கி இருக்க வேண்டும். இத்தகைய உணர்வும் சிந்தனையும் பொதுமக்களிடம் அதிகமாக இருக்கின்ற வேளையில் தலைவர்கள்தான் அரசியல் காரணங்களுக்-காக மாறுபட்டு நிற்கின்றனர்.

இருந்தாலும் சொற்களை வெளிப்படுத்தும்பொழுது அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் உள்ளத்தைப் பாதிக்கக்கூடியச் சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

மலேசிய சமுதாயம், பல இனங்கள், பல சமயங்கள், பல மொழிகள் என்றெல்லாம் பன்முக பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட கூட்டு சமுதாயம் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும். அத்துடன் இனம்-மொழி குறித்த பேச்சுகள் சலசலப்பை ஏற்படுத்தும் என்று டிசம்பர் 5, புதன்கிழமை இரவில் கோலாலம்பூர் அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான அவர் பேசினார்.

அரசியலில் எந்த வகையிலாவது ஆதாயம் பெற விரும்பும் தலைவர்கள், இனம்-சமயம் சம்பந்தப்பட்ட கருத்துகளை ஆதாரம் இன்றி வெளிப்படுத்தி மலேசிய மக்கள் காலங்காலமாகப் போற்றிவரும் நீடித்த அமைதிக்கும் நிலையான ஒருமைப்பாட்டிற்கும் இடையூறு விளைவிக்க முயலுகின்றனர் என்று செய்தி-யாளர்களிடம் கருத்து தெரிவித்த பொன்.வேதமூர்த்தி, நாட்டில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்ட வேண்டியது அனைவரின் கடப்பாடு என்பதை வலியுறுத்தினார்.

சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்றுவரும் முகமது அடிப், கிருஷ்ணன், பத்மநாதன், வீர சிங்கம் உள்ளிட்ட அனைவரும் விரைவில் குணமடைய வேண்டி ஹிண்ட்ராஃப் மற்றும் மலேசிய இந்து தரும மாமன்றத்தின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் பொதுமக்களும் ஊடகத் துறையினரும் கலந்து கொண்டானர்.

ஹிண்ட்ராஃப் சிலாங்கூர் மாநிலத் தலவர் சி.மணிமாறன், கோலாலம்பூர் கூட்டுறவுப் பிரதேசத் தலைவர் ச.சசிக்குமார் ஆகியோரின் தலைமையில் ஹிண்ட்ராஃப் இயக்கத்தினரும் இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்து தர்ம மாமன்றத்தினரும் கலந்து கொண்ட இந்தச் சிறப்புப் பிரார்த்தனையில் சமூக நல்லிணக்க சிந்தனை முன்மொழியப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன