கேமரன்மலை, ஜன. 26
கேமரன்மலைத் தொகுதியின் பிரிஞ்சாங் வாக்களிப்பு மையம் அருகே ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் தமது ஆதரவர்ளோடு சென்றதைக் கண்ட தேசிய முன்னணி ஆதரவாளர்கள் சிலர் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
தேசிய முன்னணி மற்றும் பாஸ் ஆதரவாளர்கள் லிம் கிட் சியாங்கைக் நோக்கி, 1957ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்துக்கு முரணாக நடந்து கொள்வதாக ஆக்ரோஷத்துடன் கூக்குரலிட்டு குற்றம் சாட்டினர்.
லிம் கிட் சியாங் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பிரபாகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் கட்சிக் கொடிகளை ஏந்தியவாறு பிரிஞ்சாங் சீனப் பள்ளியின் வாக்களிப்பு மையத்திற்கு 50 மீட்டர் தூரத்தில் சென்றதை தேசிய முன்னணி ஆதரவாளர்கள் கண்டித்து அதிருப்தியைத் தெரிவித்தனர்.
இதனால், சற்று நேரத்திற்கு அப்பகுதி பரபரப்பாக இருந்தது. பின்னர் அமலாக்கத் தரப்பார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து சல சலப்பை ஏற்படுத்திய கும்பலை அங்கிருந்து அகற்றியது.