கோலாலம்பூர், பிப் 6-

நடப்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுவதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்த அமைச்சரவை தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

இதில் ஏந்தவொரு மாற்றமும் இல்லை என்று தலைநகரில் தேசிய வர்த்தக சம்மேளனமும் நிதியமைச்சர் லிம் குவான் எங்கும் இணைந்து ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் துன் மகாதீர் பேசினார்.

இதன்வழி சீனப் புத்தாண்டிற்குப் பிறகு பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்க அமைச்சரவையில் மாற்றம் நிகழலாம் என்ற வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.