கோலாலம்பூர் மார்ச் 22-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் நிகழ்ச்சியில் அவரது ஸ்ரீஆதரவாளர்களுக்கும் மலாயா பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் இடையே. கைகலப்பு ஏற்பட்டது. மலாயாபல்கலைக் கழகத்திற்கு முன் அம்ஜால் உணவகத்தில் நஜீப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

நஜீப்பின் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த உனவகத்திற்கு எதிரே உள்ள சாலையில் 6 முதல் 8 பேர் கொண்ட மாணவர் கும்பல் கூடியிருந்தனர். மோசடி மற்றும் 260 கோடி வெள்ளி எங்கே என எழுதப்பட்டிருந்த அட்டையையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நஜீப்பின் ஆதரவாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் வைத்திருந்த அட்டையை பிடுங்கி அதனை பிடித்து கிழிததது எறிந்தபோது அங்கு கைகலப்பு ஏற்பட்டது. அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் லோக்மான் ஆடாமும் நஜீப்பின் உருவத்தைப்போன்று வரையப்பட்டிருந்த அட்டையை கிழித்தெறியும் காட்சியை செய்தியாளர்களின் ஒளி நாடாவில் காணமுடிந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அருகே மாணவர்கள் திரண்டது குறித்து நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் எங்களின் பாஸ் டத்தோஸ்ரீ நஜீப் பின் தோற்றத்தைக் கொண்ட படத்துடன் கொண்ட அட்டையை அவர்கள் ஏன் வைத்திருக்க வேண்டும் என லோக்மான் வினவினார்.

………………………………………………………………………………………………….

விளம்பரம்