அஸ்மினுக்குத் துணைப் பிரதமர் பதவியா?

கோலாலம்பூர், ஏப்ரல் 3-

   வரும் ஜூன் மாதத்தில் தாம் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவதாக வெளியான ஆருடத்தை பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மறுத்துள்ளார்.

      நோன்பு பெருநாளுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றத்தில் தாம் துணைப் பிரதமராக நியமிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுவது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸ்மின் கூறினார்.

“மக்கள் எங்களுக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் நாட்டை சீரமைக்கும் பணியில் அமைச்சரவை தற்போது முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது”என்று தலைநகரில் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

அதே வேளையில், தேர்தல் கொள்கை அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின்.