அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ரந்தாவ் இடைத் தேர்தல் முகமட் ஹாசான் எளிதாக வெற்றி! கருத்துக் கணிப்பு
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ரந்தாவ் இடைத் தேர்தல் முகமட் ஹாசான் எளிதாக வெற்றி! கருத்துக் கணிப்பு

(கா.மாரியப்பன்)

ரந்தாவ், ஏப். 12-

ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மிகவும் பெரும்பான்மையில் வெற்றி பெற்று மீண்டும் டத்தோஶ்ரீ முகமது ஹாசான் தனது தொகுதியை தக்க வைத்துக் கொள்வரெனக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

இல்ஹாம் மையம் எனும் சுயச்சையான நிறுவனம் 396 வாக்காளர்களிடையை நடத்தியக் கருத்துக் கணிப்பில் சீனர்கள், இந்தியர்கள் உட்பட பெரும்பான்மையினர் தேக் மாட் என அழைக்கப்படும் டத்தோஶ்ரீ முகமது ஹாசானுக்கு தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். மூன்று தவணை சட்டமன்ற உறுப்பினராகவும் மாநில மந்திரி புசாராகவும் இருந்துள்ள அவரின் சிறந்த சேவை அவரின் வெற்றிக்கு வலு சேர்த்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில் 87.4 சதவீதத்தினர், அவர் அடிக்கடி தொகுதியில் இறங்கி மக்களிடையை எளிமையாகப் பழகி அவர்களின் சமூகநல பிரச்சனையைக் கேட்டறிந்து உதவியதை நினைவுக் கூர்ந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். பொதுவாக மொத்தத்தில் 81.6 சதவீததினர் முகமது ஹாசானுக்கும் டாக்டர் ஶ்ரீராம் மற்றும் இதர வேட்பாளர்களுக்கு 17.7 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.மேலும் டாக்டர் ஶ்ரீராம் உள்ளூரைச் சேர்ந்தவர் இல்லையென தெரிவித்தனர்.

இத்தொகுதியில் இந்தியர்கள் இரண்டாகப் பிளவு பட்டுள்ளார்கள். பக்காத்தான் ஹாராப்பான் மலாய்காரர்களின் வாக்கை கவரத் தவறி விட்டது. அம்னோவின் இடைக்காலத் தலைவரான முகமது ஹாசானுக்கு மலாய்காரர்களின் ஆதரவுப் பெருகியுள்ளது. இத்தொகுதியில் முகமது ஹாசான், டாக்டர் ஶ்ரீராம், சுயச்சைகளான ஆர் மலர் மற்றும் முகமட் நோர் யாசின் ஆகிய நால்வர் போட்டியிடுகிறார்கள். இத்தொகுதியில் மலாய்காரர்கள் 53 சதவீதம், இந்தியர்கள் 27 சதவீதம், சீனர்கள் 19 சதவீதம் மற்றும் இதர இனத்தவர்கள் 1 சதவீதமாகும்.. இதற்கிடையில் முகமது ஹாசான் மோட்டார் சைக்களில் வீடுவீடாகச் சென்று ஆதரவுத் தேடி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன