நீதிமன்ற வளாகத்தில் 66ஆவது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார் நஜிப்!

கோலாலம்பூர் ஜூலை 23-

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று தமது 66ஆவது பிறந்தநாளை நீதிமன்ற வளாகத்தில் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்ந்த விசாரணை நடந்து வரும் வேளையில் நஜிப்பின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் வளாகத்தில் கூடினர்.

நீதிமன்ற வளாகத்தில் கூடிய நஜிப்பின் ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடலையும் பாடினார்கள். அதோடு கேக்கும் வெட்டப்பட்டது. இதில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ தனேந்திரனும் கலந்து கொண்டார்.

2009ஆம் ஆண்டு மலேசிய பிரதமராக பொறுப்பேற்ற நஜீப், தற்போது தேசிய முன்னணி கட்சியின் ஆலோசகராக பதவி வகிக்கிறார்.