உலக தமிழ் இணைய மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்றைய மாநாடு மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளரும், குற்றவியல் நிபுணரும், நாடறிந்த தன்முனைப்பு பேச்சாளருமான முனைவர் ரஹீம் கமாலுடின் அவர்களின் சொற்பொழிவுடன் துவக்கம் கண்டது.
சமூக வலைத்தளங்களும் குற்றங்களும் எனும் தலைப்பில் அவர் பேசினார். வர்த்தகம், உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ளுதல், பயனான தகவல்கள், கருத்து பரிமாற்றங்கள் என சமூக வலைத்தளங்களின் வழி பலரும் நன்மையடைந்து வருகின்றார்கள். அதே வேளையில் இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தும் நிலையில் குற்றச் செயல்களும் அதிகரித்து வருகிறது என அவர் கருத்துரைத்தார்.
ஆணைகளையும் பெண்களையும் சேர்த்தே மலேசியாவில் நிலவும் 5 வகையான குற்றங்களை முன்னிறுத்தி அவர் பேசினார். இணைய காதல் மோசடி, குழந்தைகள் மீதான பாலியல் இச்சை, பாலியல் படங்களை பரப்புதல், போதைப்பொருள் விற்பனை, தீவிரவாதம் ஆகிய அந்த 5 குற்றங்கள் குறித்தும் துல்லியமாக அவர் எடுத்துக்கூறினார்.
இதில், இணைய காதல் மோசடியில் மட்டுமே சென்ற ஆண்டு மலேசியாவில் படித்தவர் படிக்காதவர் என்கிற வித்தியாசம் இல்லாமல் மில்லியன் கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் எனும் அதிர்ச்சி தகவலையும் அவர் சான்றுகளுடன் வெளியிட்டார். அவரை மாநாட்டின் தலைவர் தனேசு பாலகிருஷ்ணனும் ஏற்பாட்டுக்குழுவினரும் கொரவித்தனர்.