வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன்! – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

இனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன்! – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கேமரன் மலை, டிச. 23-

கேமரன் மலை கோலா தெர்லா இந்திய விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண தவறிய மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கின்றது. அந்த வகையில் மாநில பொறுப்புகளில் உள்ள அனைவரையும் பதவி விலகத் தம் கேட்டுக்கொண்டதாக மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

மாநில பொறுப்புக்களில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர், நகராண்மைக் கழக உறுப்பினர்கள் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை மாநில மந்திரி பெசாரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டியவர்கள். அதுமட்டுமின்றி அப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டியது அவர்களின் கடமையாகும். அதனைச் செயல்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்ற போது அந்தப் பதவியில் இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

கோலா தெர்லா பகுதியை பொருத்தவரை மஇகாவிற்கும் தேசிய முன்னணிக்கும் அங்குள்ள வாக்காளர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தான் நிசப்தமான உண்மை.

கடந்த பொதுத் தேர்தலில் கூட அப்பகுதியிலிருந்து 300 க்கும் குறைவான வாக்குகளை மட்டுமே தேசிய முன்னணி பெற்றது. ஆனால் அதை இப்போது காரணம் காட்டி அவர்களை ஒதுக்குவது நமது மாண்பு அல்ல. கட்சியும் பதவியும் விட இனமான உணர்வு தான் மிக முக்கியம் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறிய குரல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்த விவகாரத்தில் மஇகாவை குறை சொல்பவர்கள் நியாயம் அற்றவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தைத் தீர்க்க வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரஸ் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் அங்குள்ள விவசாயிகள் வேறு ஒருவரின் பேச்சை கேட்டுக்கொண்டு நீதிமன்ற வழக்கைநாடினார்கள்.

பின்னர் அதை வாபஸ் பெற்றுக்கொண்டு மாற்று நிலத்திற்கு ஆவணச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அவர்களுக்கு யார் ஆலோசனை வழங்கியது என்று கூடத் தெரியவில்லை.

ஆனால் மஇகாவைப் பொறுத்தவரை இந்தியர்களுக்குப் பிரச்சினை என்றால் முன்னின்று உதவிக்கரம் நீட்டுவோம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் தொடர் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என டான் ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

One thought on “இனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன்! – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

 1. கர்ணன் பாண்டுரங்கன்

  மாநில அரசாஙம் தேசிய முன்னணியிடம் இருந்தாலும்,
  மத்திய அரசாஙம் மக்கள் கூட்டணிடம் தான் அதிகாரம் உள்ளது,
  உடணடியாக மத்திய அரசாங்கம் முடிவு எடுக்கலாம் என்பதை யாரும் மறந்துவிடவோ அல்லது மறைக்கவோ முடியாது.
  மலேசிய இந்திய அரசியல்வாதிகள் தங்களின் ஒற்றுமையை இங்கு காட்ட வேண்டும்.
  இது நமது சமுதாயப் பிரச்சனை மற்றும் நமது மானப் பிரச்சனை அடங்கியுள்ளது. அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன