கோலாலம்பூர், மே. 9
சமூகப் பாதுகாப்பு அமைப்பான சொக்சோ கோவிட்-19 தொற்று பரிசோதனைக்கு RT-PCR முறையை மட்டுமே பயன்படுத்துகிறது. RTK Antibody முறையில் யாரும் பரிசோதிக்கப்படவில்லை என அது தெரிவித்துள்ளது.
மலேசியப் பாதுகாப்பு மன்றமும் சுகாதார அமைச்சும் வரையறுத்துள்ள வழிகட்டுதல்கலுக்கு ஏற்ப இப்பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு இது தொற்றின் சிவப்பு குறியீடு வழங்கப்பட்டப் பகுதிகளிலும் கட்டுமானத் துறைகளிலும் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மட்டும் பிணிப்பாய்வு செய்யப்படுகிறது என சொக்சோ மேலும் விவரித்துள்ளது.


