Homeசமூகம்குடியுரிமை அல்லாத மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்!! - டிரா மலேசியா சரவணன் நினைவுறுத்தல்

குடியுரிமை அல்லாத மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்!! – டிரா மலேசியா சரவணன் நினைவுறுத்தல்

கோலாலம்பூர் மே 13-

சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையைக் குடிநுழைவு துறை மேற்கொண்டு வருகின்றது. இச்சூழ்நிலையில் அடிப்படை ஆவணங்களைக் கொண்டிருக்காத மலேசியர்கள் கைது செய்யப்படுவது தொடரக்கூடாது என டிரா மலேசியா தலைவர் சரவணன் சின்னப்பன் நினைவுறுத்தினார்.

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் 19 கிருமித் தொற்று அந்நியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இச்சூழ்நிலையில் மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் அந்நியர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்கின்றது.

இது மிக ஆக்ககரமான நடவடிக்கை என்றாலும் இதில் அடிப்படை ஆவணங்களைக் கொண்டிருக்க மலேசியர்களைக் கைது செய்யக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார். அந்நியத் தொழிலாளர்கள் வேறு குடியுரிமை இல்லாத மலேசியர்கள் வேறு.

அடிப்படை ஆவணங்களைக் கொண்டிருக்காத மலேசியர்கள் தடுத்து வைக்கப்படும் போது பல்வேறான இன்னல்களை எதிர்கொள்கிறார்கள். இதனைத் தவிர்க்க வேண்டுமென்றால் அடிப்படை ஆவணம் இல்லாதவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

அதைவிட மிக முக்கியமாக வெளியிட செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் நீங்கள் மலேசியர் என்பதை உறுதிப்படுத்தும் சில ஆவணங்களைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் படித்த பள்ளியின் சான்றிதழ், பணியிட கடிதம் ஆகியவற்றைக் கொண்டிருப்பது அவசியமாகும். போலீஸ் அல்லது குடிநுழைவு அதிகாரிகளைப் பார்த்தவுடன் பதற்றம் அடையாமல் நீங்கள் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்திருக்கும் தகவலையும் உங்களிடம் இருக்கும் ஆவணங்களையும் ஒப்படைத்தால் கைது செய்வதில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை ஆவணம் இல்லாத மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பது மிக அவசியம். இச்சூழ்நிலையில் இம்மாதிரியான விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என சரவணன் சின்னப்பன் கேட்டுக்கொண்டார்.

spot_img

latest articles

explore more