சபாநாயகரை மாற்றும் வாக்கெடுப்பு வெற்றி!]

கோலாலம்பூர், ஜூலை 13-

சபாநாயகரை மாற்றுவதற்கு பிரதமர் டான்ஶ்ரீ முகீடின் யாசின் முன்வைத்த பரிந்துரை வெற்றி பெற்றுள்ளது. 2 வாக்குகள் பெரும்பான்மையில், புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியக் கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்றைய நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் தான்ஶ்ரீ முகமட் ஆரிஃப் மட் யூசுப், துணை சபாநாயகர் ஙா கோர் மிங் ஆகியோர் மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டபோது, அங்கே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

முன்னதாக சபாநாயகர், முகமட் அரீப் மட் யூசோப், துணைச் சபாநாயகர் என இருவரையும் மாற்ற வேண்டுமென பிரதமர் பரிந்துரைத்திருந்தார்.

இதற்கான இன்று நடந்த வாக்கெடுப்பில், தேசியக் கூட்டணியின் கை ஓங்கியது. 2 வாக்குகள் பெரும்பான்மையில் புதிய சபாநாயகராக தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸார் அஸிஸான் ஹருமும் துணைச் சபாநாயகராகப் பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸாலினா ஒத்மான் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளார்கள். பிரதமர் டான்ஶ்ரீ முகீடின் யாசினுக்கு நாடாளுமன்றத்தில் கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.