கோலாலம்பூர். ஆக. 3- 

தேசியக் கூட்டணி அல்லது முஃபாக்கட் நேஷனல் இவற்றில் பாஸ் யாருடன் இணைந்து செயல்படுகின்றது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று பார்ட்டி அமானா நெகாரா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சலாவுதீன் அயூப் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையில் பாஸ் கட்சி யாரும் இணைந்து செயல்படுகின்றது என்பதற்குத் தெளிவான பதில் இல்லை. அமைச்சரவையில் இருப்பதால் தேசியக் கூட்டணியுடன் இணைந்திருப்பதாகத் தெரிகின்றது. ஆனால் முஃபாக்கட் கூட்டணியில் முக்கிய அக்கம் வகிக்கின்றார்கள். இதில் அவர்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்று அவர் வினவினார்.

எனவே நீங்கள் (பாஸ்) எங்கே இருக்க விரும்புகின்றீர்கள் என்பதைத் தெளிவாகக் கூறுங்கள் என்று சலாவுதீன் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.