புத்ராஜெயா | பிப்பரவரி 11:-

உலகத்தர தனிநபர் தடகள சைக்கிளோட்டப் போட்டியில் மலேசிய சைக்கிளோட்ட வீரரான முகம்மட் அஸிஸுல்ஹஸ்னி அவாங்கிற்கு பிரதமர் முகிதீன் யாசின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

உலகத் தர வரிசையில் முதல் நிலை மின்னல் வீரனாக வெற்றி பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்ததைச் சுட்டிக் காட்டி பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த வெற்றியானது டத்தோ நிக்கோல் டேவின் எல்லா காலத்திலும் சிறந்த விளையாட்டாளர் விருதை வென்ற பின்னர் மலேசிய விளையாட்டுத் துறையின் குறிப்பேடு நிறைவடைந்து இருப்பதாக அவர் சொன்னார்.

வெற்றி பெற்ற முகம்மட் அஸிஸுல்ஹஸ்னிக்கு எனது சார்பிலும் விளையாட்டு இரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது வெற்றி மற்ற இளம் விளையாட்டாளர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையட்டும். அவர்களின் வெற்றி எனும் கனவு பளிக்க உந்துகோலாக அமையட்டும்.

இந்த வெற்றியை ஓரு முதற்படியாகக் கொண்டு அடுத்து தோக்கியோ நகரில் நடக்கவுல்ள ஒலிம்பிக்கிலும் சாதனை படைக்க முகம்மட் அஸிஸுல்ஹஸ்னிக்கு பிரதமர் தனது முகநூல் பதிவில் சொன்னார்.