Homeமலேசியாமேலும் மூன்று காவல்துறை பயிற்சி மையங்களில் கோவிட்-19 பரவல்

மேலும் மூன்று காவல்துறை பயிற்சி மையங்களில் கோவிட்-19 பரவல்

கோலாலம்பூர் | பிப்பரவரி 12:-

மேலும் 3 மாநிலங்களில் உள்ள காவல்துறை பயிற்சி மையங்களில் கோவிட்-19 பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கானக் காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கையை அது முடுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக அன்மையில் இரவாங் புக்கிட் செந்தோசா காவல்துறை பயிற்சி மையத்தில் கோவிட்-19 தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது.

நேறைய நிலவரப்படி, இங்கு 85 பேருக்கு நடத்தப்பட்ட கோவிட்-19 சோதனையில் 14 பேருக்கு அத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஜாலான் சுல்தான் யாஹ்யா பெட்ராவில் உள்ள காவல்துறை பயிற்சி மையத்தில் கோவிட்-19 தொற்று பரவியிருந்தது. அங்கு பாதிக்கப்பட்ட 465 பேரில் 358 பேர் தற்போது குணமடைந்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜோகூர், சிகாமாட் ஜாலான் பை பாஸ்-இல் உள்ள காவல்துறை பயிற்சி மையத்தில் 189 பேர் அத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 21 பேர் குணமடைந்துள்ளனர் என புக்கிட் அமான் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் குற்றப் புலனாய்வுத் துறையில் இயக்குநர் இரம்லி டின் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து மேலும் பேசிய அவர், கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்க சுகாதார அமைச்சுக்கு எப்போதுமே தமது தரப்பு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கூறினார்.

spot_img

latest articles

explore more