குவாந்தான் | பிப்பரவரி 14:-

காவல்துறையினரைத் தொடர்புப் படுத்திய பல்வேறு சம்பவங்களும் குற்றச்சாட்டுகளும் அதிகமாகி வருகின்றன. இது தொடர்பான பாலியல் துன்புறுத்தல் சட்டப் பரிந்துரையை சீராக்கி மிக விரைவாக தாக்கல் செய்ய வேண்டும் என அச்சட்டத்தை உருவாக்குபவர்களை குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபுஸியா சால்லே வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையை எதிர்நோக்குகிறவர்களின் இறுதித் தற்காப்புக் கோட்டையாக அதிகாரிகளும் அதிகாரத்துவத்தினரும் இருக்க வேண்டும் என சமுதாயம் எதிர்ப்பார்க்கப்படுகிறதாக அவர் தெரிவித்தார்.

இதற்காகத்தான் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம் அவசியமாகிறது. கோவிட்-19 தொற்றுக் காலத்தில் பொதுச் சேவையில் இருப்பவர்கள் குறிப்பாக முன்களப் பணியாளர்கள் மட்டுமே இப்போய்தைக்கு ஒரே நம்பிக்கை,

முன்களப் பணியாளர்களின் உழைப்பும் தியாகமும் பாராட்டத்தக்க ஒன்றாகும். தங்களின் அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தமாட்டார்கள் எனப் பெரிதும் நம்புகிறோம்.  செய்யமாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

கடந்த பிப்பரவரி 11ஆம் நாள் சாலைத் தடுப்புச் சோதனையில் நிறுத்தப்பட்ட ஒரு பெண்மணியிடம் இருந்து சோதனை எனும் பெயரில் காவல்துறை அதிகாரி ஒருவர் தொடர்பு எண்ணைப் பெற்றுக் கொண்ட பின்னர் குறுஞ்செய்திகளை அனுப்பி அறிமுகம் செய்துகொள்ளக் கேட்டுள்ளார்.  

இவ்விவகாரம் குறித்து அந்தப் பெண்மணி காவல்துறையில் புகாரையும் கொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் சாலைத் தடுப்புச் சோதனைகளில் காவல்துறை அதிகாரிகளால் தாம் எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுககு ஆளானோம் என்பதை அதிகமானப் பெண்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இன்னும் குறிப்பாக, இதே போல் ஒரு சாலைத் தடுப்பில் வாகனமோட்டி வந்த பெண்ணிடம் உள்ளாடை அணியாதது குறித்தும் கேட்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் கடந்த சனவரி 13 முதல் அதிகமான சாலைத் தடுப்புச் சோதனைகள் போடப்பட்டுள்ளன.

காவல்துறையினரின் நற்பெயரருக்குக் களங்கம் விளைவிக்கும் அளவில் நடந்துள்ள இவ்விவகாரம் குறித்து தேசியக் காவல் படைத் தலைவர்  அப்துல் ஹமீட் பாடோர் கவனிக்க வேண்டும். மேலும் இதே போல் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஃபுசியா சல்லே கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், தே விவகாரம் குறித்து பேசிய  பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கூறுகையில், பாலியல் துன்புறுத்தல் சட்டப் பரிந்துரை  குறித்த அன்மையத் தகவல்களைப் பொது கக்களுக்கு  வழங்க வேண்டு  என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருனைக் கேட்டுக் கொண்டார்.

கடந்த சனவரி 7ஆம் நாள் அந்தச் சட்டப் பரிந்துரை இவ்வாண்டு தக்கல் செய்யப்படும் என அமைச்சர் ரீனா தெரிவித்திருந்தார்.

அன்றைய நாளில் இருந்து நான்காவது நாள் மலேசியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் காரணமாக நாடாளுமன்றக் கூட்டம் கூடுவதிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது.

கோவிட்-19ஐக் கட்டுப்பட்டுத்த தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு முழு அதிகாரம் தேவைப்படுவதால் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவல் ஓய்ந்த பிறாகு பிரதமர் முகிதீன் யாசீன் தேர்தல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதனால், இந்த சட்டப் பரிந்துரை அங்கிகரிக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருந்த, பாலியல் துன்புறுத்தல் சட்டப் பரிந்துரையானது நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியால் ஒத்திவைக்கப்பட்டது என்ன்பது குறிப்பிடத்தக்கது.