Homeமலேசியாபரிவுமிக்க மக்கள் உதவித் தொகை BPR விண்ணப்ப நாள் நீட்டிப்பு

பரிவுமிக்க மக்கள் உதவித் தொகை BPR விண்ணப்ப நாள் நீட்டிப்பு

கோலாலம்பூர் | பிப்பரவரி 14:-

பிபிஆட் எனப்படும் பரிவுமிக்க மக்கள் உதவித் தொகை  (BANTUAN PRIHATIN RAKYAT) விண்ணப்ப நாள் இம்மாதம் பிப்பரவரி 25 ஆம் நாள் வரை நிட்டிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அறிவித்துள்ளார்.

தற்போது அந்த நிதி கிடைத்தவர்கள் மட்டுமே புதிய விண்ணப்பத்தைச் செய்ய முடியும். மாதக் குடும்ப வருமானம் ரி.ம. 5,000க்கும் குறைவாகப் பெறுகிறவர்கள் அவ்விண்ணப்பத்தைச் செய்யலாம்.

இதனிடையே, முன்னதாக 2020 BSH மக்கள் வாழ்க்கைச் செலவு உதவித் தொகையையும் BPN தேசிய பரிவுமிக்க உதவித் தொகையையும் பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என நிதியமைச்சர் கூறினார்.

முதல் கட்ட BPR உதவித் தொகையை மக்கள் இம்மாத இறுதிக்குள் பெறுவர். இரண்டாம் கட்ட உதவித் தொகையை மே மாதத் தொடக்கத்தில் பெறுவர் என இன்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more