கோலாலம்பூர் | பிப்பரவரி 15

அரசியல் காரணங்களுக்காகவும் சுயநலத்துக்காகவும் இன உணர்வுகளைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் தான் ஶ்ரீ முகிதின் யாசின் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டுத் திட்ட வரைவு 2021-2030ஐ அறிமுகப்படுத்தி பேசிய பிரதமர், இது பல இன மக்களைக் கொண்ட நாடுகளின் மிகப்பெரிய பிரச்சனை என அவர் கூறினார்.

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. அது போலவே, மக்களும் இது வரை கட்டிக் காத்த சமூக நல்லிணக்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் எனத் தாம் நம்புவதாக பிரதமர் கூறினார்.

இன உணர்வுகளை தூண்டுவதன் மூலம் தங்கள் அரசியல் நலன்களை உயர்த்த முயற்சிக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் முகநூல் நேரடி ஒளிபரப்பில் பிரதமர் தெரிவித்தார்.

தேசிய ஒருமைபாட்டு கொள்கைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் மிகப்பெரிய பொறுப்பினை தேசிய ஒருமைப்பாடு அமைச்சு கொண்டுள்ளது.

கோவிட் -19க்கு எதிரான போரில் இனம் அல்லது மதத்தைப் கருத்தில் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் அக்கறை செலுத்திய மக்களும், முன்களப் பணியாளர்களையும் பிரதமர் பாராட்டினார்.

இந்த ஒற்றுமை வலுப்படுத்தப்படுவதால் இன உறவுகளுக்கான சவால்களை மிகவும் திறம்பட சமாளிக்க உதவும்.

“பன்முகத்தன்மையில் ஒற்றுமை” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே ஒற்றுமையைப் விதைக்கவும் பலப்படுத்துவதோடு அதனைத் தொடர்ந்து பராமரிக்கவும் நீண்டகால உத்திகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன என்றும் பிரதமர் சொன்னார்.

அமைச்சின் வழியாக்க அடுத்தப் பத்து ஆண்டு காலத்திற்கான தேசிய ஒருமைப்பாட்டு கொள்கையின் கீழ் வரையப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் செயலாக்கம் காணும் என அவர் குறிப்பிட்டார்.