Homeமலேசியாகோவிட்-19 தடுப்பூசி : முதன்மைப் பட்டியலில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்

கோவிட்-19 தடுப்பூசி : முதன்மைப் பட்டியலில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்

கோலாலம்பூர் | பிப்பரவரி 16:-

கோவிட்-19 தடுப்பூசியைப் பெறும் முதன்மையானவர்கள் பட்டியலில் நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர் என பிரதமர் முகிதீன் யாசின் தெரிவித்தார்.

எதிர்வரும் பிப்பரவரி 26ஆம் நாள் தொடங்கப்படவுள்ள முதற்கட்ட தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின்கீழ் பெறுவர் என அவர் கூறினார்.

முதற்கட்டமாகத் தடுப்பூசியைப் பெறும் முன்களப் பணியாளர்களில் சுகாதார அமைச்சின் ஊழியர்களும் அதிகாரத்துவ செயலாக்க அதிகாரிகளும் அடங்குவர்.

பிரதமர் இந்த விவரத்தை இன்று அறிமுகம் கண்ட தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வழிகாட்டி கையேட்டின் வெளியீட்டின் உரையில் குறிப்பிட்டார்.

முதற்கட்டத் தடுப்ப்யுசித் திட்டம் மே மாதம் வரை நீடுக்கும்.

இரண்டாம் கட்டம் ஜூன் மாத வாக்கில் தொடங்கும். அப்போது கோவிட்-19 தொற்று காண அதிக வாய்ப்பு உள்ள ஆபத்தானப் பிரிவினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். குறிப்பாக நடமாட முடியாத மூத்த குடிமக்கள் இதில் அடங்குவர்.

அவர்களைத் தவிர்த்த மற்ற மலேசியர்களுக்கு மூன்றாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் செலுத்தப்படும். அஃது ஆகஸ்டு மாதம் தொடங்கும் எனப் பிரதமர் தமது உரையில் விளக்கினார்

spot_img

latest articles

explore more