ரிம6000 ரொக்கப் பரிசுத் தொகையில் ஒரு பகுதியை வெல்லும் ஓர் அறிய வாய்ப்பு

‘ஜோடி@ராகாப் போட்டிப் பற்றினச் சில விபரங்கள்:
• 2021 பிப்ரவரி 19 வரை நடைப்பெரும் ராகாவின் திறமைகளுக்கானப் போட்டியான ‘ஜோடி@ராகா’-இன் மெய்நிகர் நேர்முகத்தேர்வில் (ஆடிஷன்) கலந்துக் கொள்ளும் அனைத்து திறன்மிக்க மலேசியர்களும் ரிம6000 ரொக்கப் பரிசுத் தொகையில் ஒரு பகுதியை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் ஓர் அறிய வாய்ப்பைப் பெறுவர்.
• ஆர்வமுள்ள போட்டியாளர்கள் தங்கள் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் வழியாக மெய்நிகர் நேர்முகத்தேர்வில் (ஆடிஷன்) கலந்துக் கொள்ளளாம். போட்டியின் காலக்கட்டத்தில் பங்கேர்பாளர்களின் இன்ஸ்டாகிராம் ‘பொதுவாக’ (public) அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
• பாடல், நடனம், நடிப்பு, ஸ்டாண்டப் காமெடி (standup comedy) மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அவர்களின் சிறப்புத் திறமைகளை ஜோடியாக வெளிப்படுத்தும் ஒரு நிமிடக் காணொளியைப் போட்டியாளர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வதோடு #jodiatraaga என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும். மேலும், @raaga.my-ஐயும் டேக் (tag) செய்ய வேண்டும். படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பாடல் ராகா அகப்பக்கத்தில் வழங்கப்பட்டப் பாடல் பட்டியலிலிருந்துத் தேர்வுச் செய்யப்பட்டதாக இருத்தல் அவசியம்.
• பெறப்பட்டச் சமர்ப்பிப்புகளிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறந்தப் போட்டியாளர்களின் காணொளிகள் மலேசியர்களின் வாக்களிப்பிற்க்காக ராகாவின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். சிறந்த 5 திறமையான ஜோடிகளை தேர்ந்தெடுக்க அனைத்து மலேசியர்களும் தங்களுக்கு பிடித்த படைப்பிற்கு 2021 பிப்ரவரி 22 முதல் 26 வரை வாக்களிக்கலாம்.
• மார்ச் 1 முதல் 7 வரை நடைபெரும் மற்றொரு வாக்களிப்புச் சுற்றை இச்சிறந்த 5 திறமையான ஜோடிகளும் எதிர்க்கொள்வர். மேலும் மார்ச் 6-ஆம் தேதி, ராகாவின் முகநூல் வழியே நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படும் இறுதிச் சுற்றிலும் போட்டியிடுவர்.
• ‘ஜோடி@ராகா’ போட்டியின் சிறந்த 3 வெற்றியாளர்கள் மொத்தம் ரிம6000 ரொக்கப் பரிசுத் தொகையை வீட்டிற்கு எடுத்துச் செல்வர்: முதலாம் நிலை வெற்றியாளர்கள் ரிம3000, இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் ரிம2000, மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்கள் ரிம1000.