Homeமலேசியாடாக்டர் நோர் ஹிஷாம் : அந்த ஒப்புதல் பாரம் இறுதுயானது அல்ல !

டாக்டர் நோர் ஹிஷாம் : அந்த ஒப்புதல் பாரம் இறுதுயானது அல்ல !

கோலாலம்பூர் | பிப்பரவரி 18 :-

கோவிட்-19 தடுப்பூசி செலுத்து நடவடிக்கை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பாரம் ஒன்று இறுதியானது அல்ல என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா நெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் காலம் நெருங்கிய வேளையில் மட்டுமே செலுத்தப்படுபவருக்கு இறுதியான ஒப்புதல் பாரம் வழங்கப்படும் என அவர் சொன்னார்.

தடுப்பூசி செலுத்தப்படுவது தன்னார்வ முறையில் என்பதால் ஒப்புதல் பாரம் வழி கையெழுத்திடப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொள்கிறவர்களிடம் சம்மதம் பெறப்படும்.

தடுப்பூசி போடப்படும் முன் மருத்துவப் பணியாளர் கொடுக்கும் விளக்கம், பயன். ஆபத்து போன்றவற்றை முழுதாக ஏற்றுக் கொண்டபின்னரே தடுப்பூசி ஒருவருக்கு செலுத்தப்படும்.

எனவே, இதன் தொடர்பில் பொது மக்கள் எந்தவொரு பொய்யானத் தகவலைப் பரப்பி குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவுக்குள் கொண்டுவரப்படும் அனைத்துத் தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு முன்னரே மதிப்பீடு செய்யப்படும். குறிப்பாக, அதன் தரம், பலனளிக்கும் தன்மை, பாதுகாப்பு ஆகியவை மதிப்பீடு செய்யப்படும்.

மேலும், தடுப்பூசியை ஏற்றுக் கொண்ட பிற நாடுகள் இது பாதுகாப்பானது என்ற கருத்துகளைப் பெற்ற பின்னரே மலேசிய அரசாங்கம் அதனை மக்களுக்கு வழங்குகிறது.

spot_img

latest articles

explore more