சென்னை | மார்ச் 23:-

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன் மீதான பரிசீலனையை முடித்த தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.

அந்த வகையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது வேட்புமனுவை சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்தார். 

இந்த நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

– நன்றி : ஜீ தமிழ் நியூஸ்