கோலாலம்பூர் | மார்ச் 25:-
கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் தேர்தலில் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டிருப்பதை நடப்புக்குக் கொண்டு வர சில சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் திட்டமிடலையும் அதற்கானத் தயார்நிலையையும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மறைமுகமாகப் பாதிப்படையச் செய்துள்ளது.
எனவே, தேர்தலில் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டிருப்பதை எதிர்வரும் 2022ஆம் ஆண்டு செப்தெம்பர் 1ஆம் தேதி முதல் நடப்புக்குக் கொண்டு வர தேவையான முன்னேற்ப்பாடுகளையும் திட்டமிடல்களையும் மீண்டும் சீராய்வு செய்ய இருப்பதாக அதன் தலைவர் அப்துல் கனி சால்லே கூறினார்.
வாக்களிக்கும் வயது 18ஆகக் குறைக்கப்படும் திட்டம் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அங்கீகாரம் பெற்றதாகும்.
இந்த சட்ட மாற்றம் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 211 பேரால் ஆதரிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு சூலை மாதம் 16 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது.
பத்து நாட்கள் கழித்து அச்சட்டம் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது,
ஆனால், அந்தத் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வர அட்திக் காலம் எடுக்கும் என மேலவைத் தலைவர் ரயிஸ் யாத்திம் தெரிவித்ததைத் தொடர்ந்து அது கேள்விக்குறியானது.
அவ்வாறு அந்த முன்னாள் அம்னோ தலைவரும் இந்நாள் பெர்சத்து தலைவருமான ரயிஸ் யாத்திம் வெளியிட்ட அந்தக்க் கருத்து குறித்து பலவாறான விமர்சனங்கள் வந்தன.
4.4 மில்லியன் இன்னும் பதிவு செய்ய வில்லை.
நாட்டின் 14வது பொதுத் தேர்தல் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது. அடுத்தப் பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டு நடைபெற வேண்டும்,
ஆனால், தற்போதைய அரசியல் நிலையைப் பார்க்கும் பொழுது அடுத்தப் பொதுத் தேர்தல் மிக அண்மையில் நடக்க வாய்ப்புகள் உள்ள நிலையில் வெகு விரைவாகவே நாடாளுமன்றத்தைக் கலைக்க மாமன்னருக்கு அரசாங்கம் பரிந்துரை செய்யும் சூழல் வரலாம்.
கோவிட்-19 தொற்று ஓய்ந்து பாதுகாப்பு நிலவும் தருணத்தில் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தான் ஶ்ரீ முகிதீன் யாசின் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஹேர்தலில் வாக்களிக்கும் வயது வரம்பு 18 ஆகக் குறைக்கப்படிருப்பதை நடப்புக்கு கொண்டு வருவதற்கும் அது தன்னியக்க முறையில் பதிவு செய்யப்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஏறத்தாழ 5.4 மில்லியன் பேர் இருக்கிறார்கள்,
அவர்களில் 18 – 20 வயதுக்கு உட்பட்டவர்கள் 1.2 மில்லியன் பேர் இருக்கிறார்கள். எஞ்சிய 4.4 மில்லியன் பேர் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
அவர்கள் ஆனால் வாக்காளர்களாக இன்னும் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள்.
21 வயதுக்கு மேல் இருக்கும் மலேசியக் குடிமக்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை என்றால் உடனடியாக mysprdaftar.spr.gov.my இணையத்தளத்திலோ அல்லது அருகில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கோ அல்லது அஞ்சலகத்திற்கூ நேரடியாக வருகை புரிந்து தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.