சென்னை | மே 2:-

திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில் சீமானுக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கிய நிலையில் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

அத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.குப்பன் முன்னிலை வகிக்கிறார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நாம் தமிழர் கட்சி பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த சுற்றுகள் அக்கட்சிக்கு எப்படி அமையும், சீமான் வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்வாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.