பீடோர் | மே 21:-
நாட்டின் 14 வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் மலேசிய அரசியல் சூழ்நிலை நிலையில்லாமல் இருக்கும் சூழலில் ம இ கா மீதான நம்பிக்கை தொடர்ந்து மக்களிடையே உயிர்பித்த வண்ணமே உள்ளதாக பேரா மாநில ம இ கா தலைவர் டத்தோ வ.இளங்கோ கூறினார்.
நம்பிய கட்சிகளும் கூட்டணிகளும் மக்களை,குறிப்பாக இந்திய சமூகத்தை கைவிட்டுவிட்ட நிலையில் அவர்களின் நம்பிக்கையாக இன்றைக்கு விளங்குவது ம இ கா மட்டுமே என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளையில்,இந்திய இளைஞர்களின் நம்பிக்கையும் உயர்கல்வி மாணவர்களின் பார்வையும் நம்பிக்கையையும் கூட ம இ காவை நோக்கி திரும்பியிருப்பது பெருமிதமான ஒன்றாக அமைந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
அன்மையில் பீடோரில் நடைபெற்ற இந்திய இளைஞர்களுடனான சந்திப்பு ம இ கா மீது இளம் தலைமுறை கொண்டிருக்கும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் கூறிய அவர் இன்றைய தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனின் தலைமைத்துவம் இளஞர்களின் நம்பிக்கைப் பெற்ற மாபெரும் அரசியல் சக்தியாக ம இ கா உருவெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பேரா மாநிலத்தில் சுங்கை சட்டமன்றத் தொகுதி உட்பட அனைத்து வட்டாரங்களிலும் ம இ கா புதுப்பொழிவுடன் புத்துயிர் பெற்று திறன்பட இயங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
மக்கள் சேவையிலும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை களைவதிலும் ம இ கா தொடர்ந்து ஆக்கப்பூர்வ பங்களிப்பையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய கோறனி நச்சில் காலக்கட்டத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து ம இ கா முன்னெடுத்து வரும் வேளையில் அஃது மக்களின் நம்பிக்கையோடு மட்டுமின்றி நல்லதொரு அரசியல் இலக்கை நோக்கியும் கட்சி பயணிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஹரிராயா பெருநாளை முன்னிட்டு சுங்கை தொகுதி வருகை தந்த பின்னர் இங்கு மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிய பின்னர் மக்களின் மனநிலையில் நிறைவுக்கொண்ட டத்தோ இளங்கோ இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.