கோலாலம்பூர் | 29/7/2021 :-
புக்கிட் டாமான்சாராவில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்திற்கு அமைச்சரவையைச் சார்ந்தவர்களும் தேசிய வழக்கறிஞர் இட்ரிஸ் ஹாருனும் வருகை புரிந்துள்ளார்கள்.
பிற்பகல் 1.30 மணி அளவில் அவர்கள் அங்கு வந்தார்கள்.
முன்னதாக, தேசிய அரண்மனை Istana Negara வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் துறை அமைச்சர் (சட்டம்) தக்கியுடின் ஹசானையும் தேசிய வழக்கறிஞர் இட்ரிஸ் ஹாருனையும் மாமன்னர் கண்டித்திருந்தார்.
அவ்விருவரும் மாமன்னரை இயங்கலை வழி சந்தித்த போது ஊரடங்கு சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறி இருந்ததாகவும், ஆனால், அதற்கு மாறாக சொன்ன சொல்லைக் காப்பாற்றதவாறு அவர்கள் நடந்து கொண்டதோடு ஊரடங்கு சட்டம் மீட்டுக் கொள்ளப் பட்டது குறித்து மக்களவையைக் குழப்பியுள்ளதாகவும் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் மாமன்னர் தெரிவித்தார்.