கோலால்மபூர் | 30/7/2021 :-
முன்னறிவிப்பில்லாமல் கிள்ளான் தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனைக்கு சுகாதார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா நேற்று இரவு வருகை தந்தார்.
இரண்டு மணி நேரங்கள் அம்மருத்துவமனையின் தற்போதைய நிலவரம் குறித்து சுகாதார அமைச்சர் பார்வையிட்டார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.
முன்னறிவிப்பில்லாமல் அவர் மருத்துவமனைக்கு வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்ததாக ஜ.செ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்லஸ் தெரிவித்தார்.
அமைச்சர் வருகை புரிந்த விவ அம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஸுல்கர்னியான் முகம்மட் இராவிக்கும் தெரியாது என அவர் மேலும் சொன்னார்.