கோலாலம்பூர் | 31/7/2021 :-

கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நோக்கில் மாகெரான் போலவே அமைக்கப்படும் தேசிய மீட்சி மன்றத்தின் அங்கத்துவம் வகிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளப் பெயர்களில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மதுவும் ஒருவர் ஆவார்.

பொருளாதாரம், சட்டம், கல்வி, அரசியல்ல் ஆகியத் துறாஇகளில் இருந்து பல முக்கியத் தலைவர்களின் பெயர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் தலைமையேற்று டதேசியக் கூட்டணி அமைத்த தேசிய மீட்சி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10/6/2021 ஆம் நாள் ம் மாமன்னரிடம் துன் மகாதீர் தேசிய மீட்சி மன்றம் குறித்து பரிந்துரைத்ததாக அவர் சொன்னார்.

மாமன்னரிடம் இது குறித்து பரிந்துரைத்தபோது இதன் அங்கத்துவத்தினர் குறித்து தாம் மிகுந்த ஆழமாகச் சிந்தித்ததாகவும் நாடு சந்தித்திருக்கும் நெருக்கடியைக் கையாள தூர நோக்குத் திட்டங்களை வகுக்க உதவியாக இருக்கும் எனவும் துன் மகாதீர் குறிப்பிட்டார்.

தற்போது இம்மன்றம் உருவாக்கப்படும் சூழல் உருவாக நாடு சந்தித்துல்ள நெருக்கடியை நடப்பு அரசாங்கம் கையாள்வதில் இருந்து தோல்வி அடைந்துள்ள மனநிலையை ஏற்படுத்தி இருப்பதுதான் காரணம் என அவர் கூறினார்.

தேசிய மீட்சி மன்றத்தின் அங்கத்துவ எண்ணிக்கை 20 பேருக்கும் மேற்கபோகாமல் இருந்தால் தான் முடிவுகளை உடனுக்குடன் எடுக்க முடியும்.

துன் மகாதீ பரிந்துரைத்த தேசிய மீட்சி மன்றத்தில் அங்கத்துவம் பெற பட்டியலிடப்பட்டோர் :

தான் ஶ்ரீ இரஃபிடா அஸிஸ்

தான் ஶ்ரீ லின் சீ யான்

தான் ஶ்ரீ முகம்மட் ஹசான் மெரிக்கன்

தான் ஶ்ரீ முகம்மட் அஸ்மான் யாஹ்யா

பேராசிரியர் டாக்டர் ஜோமோ கே சுந்தரம்

தான் ஶ்ரீ அபு பக்கார் சுலைமான்

டத்தோ பேராசியர் டாக்டர் அடீபா கமருல்ஸாமான்

பேராசிரியர் எமிரட்டஸ் டத்தோ டாக்டர் லாம் சாய் கிட்

டத்தோ டாக்டர் மூசா நோர்டின்,

டத்தோ டாக்டர் அமார் சிங் HSS

டாக்டர் குமித்தா தேவதாஸ்

அம்மன்றம் வழி எடுக்கப்படும் முடிவுகள் யாவும் சட்டத்திற்கு உட்பட்டதாக இருப்பதை உறுதி செய்ய சில சட்ட வல்ல்லுநர்களையும் துன் மகாதீர் பரிந்துரைத்தார்.

பேராசிரியர் எமிரட்டஸ் சாட் ஃபாருக்கி,

பேராசிரியர் டத்தோ சாலே புவாங்

கல்வி சார்ந்த சிக்கல்களுக்கும், இல்லிருப்புக் கற்றல், கல்வித் தொலைக்காட்சி போன்றவைகள், பிள்ளைகளின் கல்விக்கு உதவியாக ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டப் பாடங்கள் ஆகியவற்றுக்கு சில முக்கியமான கல்விமான்களையும் துன் மகாதீர் பரிந்துரைத்தார்.

YAM துங்கு அலி ரெதாவுடின் துவான்கு மூஹ்ரிஸ்,

தான் ஶ்ரீ முகம்மட் ஷுக்ரி அப்துல் யாஜிட்,

சாமுவல் இசையா

மேலும் அரசியல் சில அரசியல் தலைவர்களையும் அவர் பரிந்துரைத்தார்.

டத்தோ ஶ்ரீ அஸலினா ஓத்மான்

ஹன்னா இயோ

அகமாட் ஃபாஹ்மி ஃபாட்ஸ்லி

ஷேட் சாடிக் ஷேட் அப்துல் இரகுமான்