Homeஅரசியல்சூழ்நிலைப் பலியாடு தேசியக் கூட்டணி அல்ல; இறந்து போன 12,000க்கும் மேற்பட்ட மக்கள் ! –...

சூழ்நிலைப் பலியாடு தேசியக் கூட்டணி அல்ல; இறந்து போன 12,000க்கும் மேற்பட்ட மக்கள் ! – ஸாஹிட்

கோலாலம்பூர் | 14/8/2021 :-

பிரதமர் மகியாதீன் நேற்று ஆற்றிய உரையில் தேசியக் கூட்டணி சூழ்நிலைப் பலியாடாகவும் அப்பாவியாகவும் காட்ட முயற்சித்து இருக்கிறார் என அம்னோவின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

தமக்கு ஆதரவு ஆதரவு வழம்ங்குவோருக்கு, குறிப்பாகத் தேசியக் கூட்டணியைத் தவிர்த்து இதர கட்சிகளுக்கு சில ‘சலுகைகள்’ வழங்கப்படும் என  நேற்று பிரதமர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதில் தோல்வி கண்டுள்ள அரசாங்கம் 12,000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டுள்ளது எனவும் ஆனால், அதனை அப்பாவியாக பிரதமர் காட்ட முயற்சித்திருக்கிறார் என ஸாஹிட் கூறினார்.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் தோல்வியை முழுதாக மகியாதின் திசை திருப்ப முயற்சிக்கிறார் என ஸாஹிட் தெரிவித்தார்.

மேலும், தேசியக் கூட்டணி தொடர்ந்து ஆட்சியில் நிலைத்திருக்க ஆதரவளிப்போருக்கு வழங்கப்படும் சன்மானத்தை ‘புனிதமாக’ச் சித்தரித்தார்.

இது மலேசிய அரசாங்கத்தின் ஒழுக்கமற்றச் செயல்.

அக்கூட்டணி தொடர்ந்து ஆட்சியில் நிலைக்காவிட்டால் தடுப்பூசித் திட்டம் சரிவர மேற்கொள்ளப்படாமல் போய்விடும் என மக்களை அச்சுறுத்துவதாகவும் உள்ளது.

ஆனால், தடுப்பூசித் திட்டம் ஆரம்பித்தக் காலம் தொட்டே சது சரிவர நடத்தப்படவில்லை என்பதாலேயே இன்று வரையில் சமூக நிலையிலான நோய்த்தடுப்பை இன்னும் அடைய முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதனால், பலியானது 12,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் ஆவர்.

மேலும், மக்களுக்கு உதவும் வகையில் இருக்கும் தேசியக் கூட்டணியின் பல திட்டங்கள் மதிக்கப்படவில்லை எனப் பிரதமர் அவ்விரையில் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more