கோலாலம்பூர் | 15/8/2021 :-
பெர்சத்து கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள் சிலர் கோலாலம்பூர் பப்லிக்காவில் உள்ள தேசியக் கூட்டணியின் தலைமையகத்தில் சந்திப்பு நடத்தினர்.
நடப்பு அரசாங்கம் குறித்து பலதரப்பட்டக் கருத்துகளும் விமர்சனங்களும் வதந்திகலூம் வந்துள்ள நிலையில் இச்சந்திப்புப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது மகியாதீனின் பிரதமர் பத்வி குறுத்து பல்வேறனாக் கருத்துகள் உலா வந்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து அவர் தமது பதவியின் இறுதி காலத்தில் இருப்பதாகவும் ஆங்காங்கே ஆருடங்கள் வலுத்து வருகின்றன.
தேசியக் கூட்டணி தலைமையகத்தில் காணப்பட்டத் தலைவர்கள் பட்டியல் :
- முஸ்தாப்பா முகம்மட் (ஜெலி)
- முகம்மட் ரெட்ஸுவான் முகம்மட் யூசோஃப் (ஆலோர் காஜா)
- அகமாட் ஃபைஸால் அஸுமு (தம்புன்)
- முகம்மட் ரஷிட் ஹஸ்னோன் (பத்து பகாட்)
- எட்மண்ட் சந்தாரா குமார் இராமநாயுடு (செகாமாட்)
- சைஃபுடின் அப்துல்லா (இண்டெரா மாக்கோத்தா)
- ஸுரைடா கமாருடின் (அம்பாங்)
- டாக்டர் சேவியர் ஜெயக்குமார் (கோலாலங்காட்)
- லேர்ரி சூன் ( ஜூலாவ்)
முன்னதாக, மகியாதீன் முகம்மது யாசின் நாளை பதவி விலகக் கூடும் என அமச்சரவையைத் தொடர்புப் படுத்திய ஒரு முக்கிய நபர் தெரிவித்திருப்பதாக சீன நாளேடான சின் சியூ செய்தி வெளியிட்டிருந்தது.
மகியாதீன் தமது அலுவலகத்தைக் காலி செய்யக் கூறப்பட்டிருப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டது.
நேற்று நண்பகல் தொடங்கி சில அமைச்சர்களின் அதிகாரிகளும் இது குறித்தத் தயார் நிலைப் பணிகளில் ஈடுபட்டதாகவும் நேற்று இரவு உத்துசானும் சீனார் ஹாரியானும் செய்தி வெளியிட்டன.
இதனிடையே, நாளை அமைச்சரவையின் சிறாப்புக் கூட்டத்திற்குப் பிறகு மாமன்னரைப் பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் சந்திக்கவிருப்பதாகவும் பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் கூறியதாக மலேசியா கினி செய்தி வெளியிட்டது.
மகியாதீனின் பதவி விலகல் கடிதத்தை மாமன்னரைச் சந்திக்கும்போது அவர் வழங்குவார் எனவும் அதனை ஏற்பதும் மறுப்பதும் மாமன்னரின் முடிவில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.


