Homeஅரசியல்யாருக்கும் பெரும்பான்மை கிடையாது ! ஒற்றுமை அரசாங்கத்தைப் பரிந்துரைக்கும் அம்னோ !

யாருக்கும் பெரும்பான்மை கிடையாது ! ஒற்றுமை அரசாங்கத்தைப் பரிந்துரைக்கும் அம்னோ !

கோலாலம்பூர் | 16/8/2021 :-

மகியாதீனின் பதவி விலகலுக்குப் பிறகு வேறு யாருக்கும் போதுமான பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் வேட்பாளர் இல்லை என அம்னோ உச்சமன்றத்தின் உறுப்பினர் ஜோஹாரொ அப்துல் கனி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார – சுகாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்து அனைவராலௌம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கலாக அது வழிநடத்தப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தார்.

நடப்பில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை, தற்போது யாரும் பொதுத் தேர்தலையும் அறிவிக்க முடியாதச் சூழலில் இருகின்றோம்.

எவே, தற்போது பிரதமர் வேட்பாளர் இல்லை என அவர் தெரிவித்தார்.

ஒற்றூமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அதன் அமைப்புக்கான இலக்கை அடைய முனைய வேண்டும்.

கோவிட்-19 பெருந்தொற்றாஇக் கையாள்வது, மக்களின் நலன் காத்தல், நிதி நிர்வாகம், பொருளாதார மீட்சி ஆகிய 4 முக்கிய இலக்குகளை அவ்வரசாங்கம் அடைய வேண்டும் என முன்னாள் நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.

முதன்மையாக தடுப்பூசித் திட்டத்தின் வழியாக நாட்டை பெருந்தொற்றில் இருந்து மீட்சி பெறச் செய்ய வேண்டும்.

தடுப்பூசி வழங்கப்படுவதில் அவ்வரசாங்கம் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்படைந்திருக்கும் நாட்டு மக்களின் நலனைக் காப்பதிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், கடுமையான விதிமுறைகளுடன் வணிகங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும்.

கடந்த 17 மாதங்களாக செய்த தவறுகளை மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொண்டாலே போதுமனது என அவர் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more