கோலாலம்பூர் | 19/8/2021 :-

இன்று (வியாழக்கிழமை) 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரண்மனைக்கு அழைக்கப்பட்டதாக அம்னோ பொதுச் செயலாளர் அகமாட் மஸ்லான் கூறினார்.

பிரதமராக பேரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பெரும்பான்மையினரால் தேர்வு செய்யப்பட்டது உறுதியாகிறது என அவர் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற அணியினர் மட்டுமே அதனை உறுதிப்படுத்த அரண்மனைக்கு அழைக்கப்படுவதாக அவர் சொன்னார்.

அம்னோவின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி தலைமையின் கீழ் துணைத் தலைவர் முகம்மட் ஹசான், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் நஜிப் அப்துல் இரஸாக், மன்றத்தின் உயர்நிலை உறுப்பினர்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஒற்றுமையின் வெற்றியாகக் கருதப்படுகிறது என அகமாட் மஸ்லான் குறிப்பிட்டார்.

காலை 10.00 மணி அளவில் கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வானிப மையம் PWTCஇல் இருந்து தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் அரண்மனைக்குப் புறப்படுவார்கள் என அவர் மேலும் கூறினார்.

மாமன்னரைச் சந்திக்க 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தத் தகவலை பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அஸிஸும் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, பாச் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலை 4.00 மணி அளவில் மாமன்னரைச் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது என அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் தெரிவித்தார்,

இறைவன் அருளால் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாட்டின் 9வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என துவான் இப்ராகிம் கூறினார்.

காலை 10.00 மணி அளவில் சபா, சரவாக் மாநிலங்களில் இருந்து 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரைச் சந்திப்பார்கள். இரண்டாம் கட்டமாக முற்பகல் 11.10 மணி அளவில் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்னோ – தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையே பிற்பகல் 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் மாமன்னரைச் சந்திக்கின்ற வேளை மாலை 4.00 மணி அளவில் பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரைச் சந்திப்பார்கள்.

காலை மணி 10.00 – முற்பகல் 11.00 (குழு 1) – 25 பேர்

முற்பகல் 11.10 – நண்பகல் 12.10 (குழு  2) – 25 பேர்

பிற்பகல் 2.00 – 3.00 (குழு  3) – 25 பேர்

பிற்பகல் 3.10 – மாலை 4.10 (குழு  4) – 25 பேர்

மாலை 4.20 – மாலை 5.00 (குழு  5) – எஞ்சியோர்