கோலாலம்பூர் | 21/8/2021 :-

இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டாம் என்பது குறித்து பெர்சத்து கட்சி ஆலோசித்து வருவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைஃபுல் தெரிவித்துள்ளார்.

114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று பிற்பகலில் பதவி உறுதி மொழி எடுப்பார் எனத் திட்டமிடப்பட்டுது.

பெர்சத்து கட்சியைப் பிளவு படுத்தும் நோக்கில் அந்தப் பொய்த் தகவல் பரவி வருவதாக வான் சைஃபுல் குறிப்பிட்டார்.

குறிப்பாக பெர்சத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் முகிதீன் யாசின் முன்மொழியப்பட்டப் பரிந்துரை எனக் கூறப்படுவதாகவும் அஃது உண்மையில்லை எனவும் வான் சைஃபுல் தெரிவித்தார்.

ஊழல் குற்றவாளிகளிடமிரிந்து தள்ளியிருப்பதற்காக இவ்வாறு கூறப்பட்டதாக அத்தகவல் சித்தரிக்கப்பட்டதாக வான் சைஃபுல் மேலும் கூறினார்.