கோலாலம்பூர் | 22/8/2021 :-

மீண்டும் அம்னோ ஆட்சியைப் பிடிக்கும் எனக் கடந்த 2018 ஆம் ஆண்டு அம்னோ பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி கூறியது இன்று நிறைவேறுகிறது எனக் கூறுகிறார்.

தேசிய முன்னணி அத்தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு நடத்தப்பட்ட அம்னோ பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இப்போது போல் அப்போது இதே அரசியல் நெருக்கடியை நாடு சந்தித்து இருந்தால், அம்னோ மிகச் சிறந்தத் தேர்வாகும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

அப்போதைய நடப்பு அரசாங்கத்திற்கு ஏதேனும் ஏற்பட்டால் நாட்டை ஆட்சி செய்ய எப்போதுமே காத்திருப்பதாக அப்போதைய உரையில் ஸாஹிட் கூறியிருந்தார்.

அப்போது அவர் கூறியிருந்தது இப்போது உண்மையாகி உள்ளது.

அந்தக் கூற்றை உண்மையாக்கிய அனைத்து தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருக்குத் தமது நன்றியை முகநூல் வாயிலாகத் தெரிவித்தார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் ஏதோ ஒரு வெளிச்சம் இருக்கும் என மிக உறுதியாகத் தாம் நம்பியாதாக ஸாஹிட் குறிப்பிட்டிருந்தார்.

நேற்ற்ஊ நாட்டின் 9வது பிரதமராக அம்னோவின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பதவியேற்றார்.

கோவிட்-19 கட்டுப்படுத்தப்ப்பட்ட பிறகு அம்னோவின் அடுத்த இலக்கு 15 பொதுத் தேர்தல் என அவர் மேலும் சொன்னார்.