பெட்டாலிங் ஜெயா | 6/9/2021 :-

தேர்தலில் வாக்களிக்கும் வயது 18ஆகக் குறைக்கப்பட்டு மாற்றம் கண்ட சட்டத்தைத் தள்ளிப் போடுவதை அரசாங்கம் கை விட வேண்டும் என மலாயா பல்கலைக்கழக மாணவர் கழகம் (KMUM) வலியுறுத்தியது.

இவ்வாண்டு இறுதிக்குள் தேர்தலில் வாக்களிக்கும் வயது 18ஆகக் குறைக்கப்பட்டு மாற்றம் கண்ட சட்டத்தை நடப்புக்குக் கொண்டு வர கூச்சிங் உயர் நீதிமன்றம் அண்மையில் அரசாங்த்திடம் கட்டளை இட்டதைத் தொடர்ந்து இம்மாணவர் இயக்கம் இவ்வாறு வலியுறுத்தியது.

இளையோர்கள் வாக்குரிமைப் பறிக்கும் வகையில் அந்த ஒத்திவைப்பு இருப்பதாக KMUM சித்தரித்தது.

கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டப்படி இளையோர்கள் வாக்களிக்கும் உரிமையைக் காத்திடம் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டச் சட்டம் நடப்புக்கு வர வேண்டும் என அவ்வமைப்பு கூறியது.

இது நாட்டின் அரசியலுக்கும் மிக அவசியமானது எனவும் அது தெரிவித்தது.

எனவே, உயர்நோதிமன்றத்தின் கட்டளாஐயை மதித்து தேர்தலில் வாக்களிக்கும் வயது 18ஆகக் குறைக்கப்பட்டு மாற்றம் கண்ட சட்டத்தை நடப்புக்குக் கொண்டு வர வேண்டும் என KMUM கேட்டுக் கொண்டது.

முன்னதாக, அச்சட்டத்தை நடப்புக்குக் கொண்டு வர காலம் எடுக்கும் எனக் கூறி அரசாங்கம் இவ்வாண்டு ஜூலையில் இருந்து அடுத்தாண்டு செப்டம்பருக்கு ஒத்தி வைத்தது.

நாட்டின் ஆட்சிஅமைப்பு முறையில் இளையோர்கள் குறிப்பாக உயர்க்கல்வி மாணவர்களின் பங்கினை வழங்கிட அரசாங்கம் மிக விரைவில் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மேலும், பல்கலைக்கழகம், கல்லூரிச் சட்டத்தின்படியும்  18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் எனும் சட்டத்தையும் அரசாங்கம் மீறி இவ்விவகாரத்தில் இரு தடைக்கல்லாக இருக்கக் கூடாது எனவும் KMUM கூறியது.