கோலாலம்பூர் | 8/9/2021 :-

பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லையென்றால் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையிலான நம்பிக்கை, சீர்திருத்தம் குறித்த ஒப்பந்தம் பாதிக்கப்படும் என ஜ.செ.க.வின் மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

மாமன்னர் கட்டளையிட்ட பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு அவசியம் இல்லை எனக் கூறிய பிரதமர் துறை சட்ட அமைச்சரின் கூற்று சரியல்ல என லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

ஒரு வேளை, பிரதமர் துறை சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவான்கு ஜஃபார் கூறியது போல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் எனும் முடிவுக்கு மாமன்னர் ஒப்புதல் வழங்கி இருந்தால், அதனை ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆனா, அத்ற்கு மாறாக தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், பிரதமர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்தினால் அது மாமன்னரைச் சிறூமைப்படுத்துவதாகி விடும் என அறிவுக்கு ஒவ்வாதத் கூற்றை சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருன் தெரிவித்துள்ளார்.

உண்மையில், 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இழந்து விட்டதால், பிரதமர் மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் எனக் கூறப்படுகிறது என்று லிம் குட் சியாங் மேலும் கூறினார்.