மலாக்கா | 19/10/2021 :-
மலாக்கா மாநிலத் தேர்தலில் பிகேஆர் கட்சி 12 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.
மலாக்கா மாநில பிகேஆர் கட்சியின் தலைவர் ஹலிம் பாச்சிக் இது குறித்து தெரிவிக்கயில், கடந்த 14 ஆம் பொதுத் தேர்தலைக் காட்டிலும் 4 தொகுதிகள் கூடுதலாகப் போட்டியிடப்பட இருப்பதாகவும் அவர் சொன்னார்.
கடந்தப் பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியுடன் இணைந்து 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆயர் லீமாவ், லெண்டு, அசஹான், பாயா ரும்புட், தெலுக் மாஸ், ரம்பாய் ஆகியத் தொகுதிகள் அவை.
இதனிடையே, மலாக்கா மாநிலத் தேர்தலைச் சந்திகிக மலாக்கா பிகேஆர் கட்சி தயாராக இருப்பதாக ஹாலிம் தெரிவித்தார்.
அடிப்படையில், எதிர்வரும் 15 வது பொதுத் தேர்தலைச் சந்திக்க மலாக்கா பிகேஆர் கட்சி தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த மாநிலத் தேர்தலைச் சந்திக்க மாநிலம் முழுவதும் செயல்பட மலாக்கா பிகேஆர் கட்சியின் தேர்தல் பணிக்குழு செயல்படும் என அவர் சொன்னார்.