புக்கிட் செலாம்பாவ், மார்ச் 28-
மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர் மருத்துவர் தி.நோவலன் தலைமையில் 500ருக்கும் அதிகமான இளைஞர்கள் மஇகாவில் இணைந்தனர்.
பல ஆண்டு காலமாக பிகேஆர் மற்றும் மற்ற கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் இன்று அந்த கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்ததைத் தொடர்ந்து தற்போது முதல் கட்டமாக 500ருக்கும் அதிகமானவர்கள் குறிப்பாக இளைஞர்கள் மஇகாவில் இணைந்தனர்.
மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் மஇகா மெர்போக் தொகுதியின் துணைத் தலைவருமான மருத்துவர் @Dr.தி.நோவலன் நடத்திய புரட்சி உரையில் கலந்து கொண்டு, இந்தியர்களுக்கும் சமுதாயத்துக்கும் தங்களின் மிகுந்த ஒற்றுமையைக் காட்டுவதற்காக 500ருக்கும் அதிகமான துடிப்புமிக்க இளைஞர்கள் இன்று மஇகாவில் புதிய உறுப்பினராக இணைந்துள்ளனர். மேலும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் தொடர்ந்து சேவை செய்ய MIC BRIGED அணியிலும் இணைய ஆர்வம் உள்ளதாக அவர்கள் கூறினார்கள்.
தூரநோக்குப் பார்வையையும், சிறந்த தலைமைத்துவ ஆற்றல்களும் கொண்ட மஇகாவின் தேசிய தலைவர் தான் ஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரனின் அயராத முயற்சிக்கு இந்த நிகழ்வு சரியான நேரத்தில்கிடைத்த வெற்றி என்று நோவலன் கூறினார்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவமும் அவருக்கு பக்க பலமாக டத்தோஸ்ரீ எம்.சரவணனின் ஆற்றலும் மற்றும் பிற தலைவர்கள் எடுத்த அயராத முயற்சியே இந்த இளைய தலைமுறையினரின் நம்பிக்கையை கட்சி மீது வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களின் அடையாள அட்டை நகல் மற்றும் உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் மெர்போக் தொகுதியின் துணைத் தலைவருமான டாக்டர்.தி.நோவலனிடம் சமர்ப்பித்தனர்.

அதன்பின்னர் டாக்டர்.தி.நோவலன் அனைத்து விண்ணப்பத்தையும் கெடா மாநிலத்தின் மஇகா தலைவர் மதிப்பிற்குரிய டத்தோ டாக்டர் சோ.ஆனந்தன் மற்றும் மெர்பொக் தொகுதியின் தலைவர் பழனிவேலு @ ஜீவா (Sg Batu )விடம் ஒப்படைத்தார் .
இது அம்பாங்கன் ஹைட்ஸ் மஇகா கிளைத் தலைவருமான டாக்டர் தி.நோவலனின் வெற்றிகரமான முயற்சியாகும்.இந்த முயற்சிக்கு அவருக்கு பக்க பலமாகவும் ஆலோசகருமான இருந்த கெடா மாநிலத்தின் மஇகா தலைவர் டத்தோ டாக்டர் சோ.ஆனந்தன் அவர்ளுக்கு தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.
டாக்டர் தி.நோவலன் தனது உரையில் , மலேசியாவில் இந்தியர்களின் வரலாற்று அவலங்கள், அவர்களின் போராட்டத்திற்கும் இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த மஇகாவின் பங்களிப்பு குறித்து ஊக்கமளிக்கும் பேச்சுக்களை நடத்தி, மலேசியாவில் உள்ள இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் நிலைநிறுத்தும் ஒரே கட்சி மஇகா மட்டுமே என்பதை இளைஞர்களுக்கு மிக தெளிவாக விளக்கினார்.
இந்திய சமுதாய மேம்பாட்டிற்கு அரசியல் உரிமையை நாம் வலிமை பெறச் செய்ய , நாடு தழுவிய நிலையில் இந்திய பிரதிநிதித்துவம் ஒரே குடையின் கீழ் அரசியல் வழி இருக்க வேண்டும்.அதற்கு உரிய ஒரே கட்சி இந்தியர்களின் தாய் கட்சி மஇ்காதான் என்று தெளிவுபடுத்தினார்.
இதைக் புரிந்து கொண்டு, மஇகாவின் தலைமையின் கீழ் இந்திய சமூகத்திற்குச் சேவை செய்வது தங்களின் மிகப்பெரிய பொறுப்பு என்று அங்கு வருகை புரிந்திருந்த அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் கருத்தில் கொண்டனர்.
புதியதோர் ஆற்றல்மிக்க தலைமுறை செய்வோம் என்ற தனது கோட்பாடுக்கு ஏற்ப புதிய தலைமுறையினரின் வெற்றிக்கு மஇகாவின் வழி சேவை செய்வதே தனது தனது தலையாய கடமை என மருத்துவர் நோவலன் தியாகராஜன் கூறினார்.