spot_img
8 C
London
spot_img
Home சமூகம் தொடர்பு அமைச்சின் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி மோசடி! எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு துணையமைச்சர் தியோ அறிவுறுத்து

தொடர்பு அமைச்சின் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி மோசடி! எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு துணையமைச்சர் தியோ அறிவுறுத்து

0
328

கூலாய், ஏப்.23-

தொடர்பு அமைச்சின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் சமீபத்திய மோசடி தந்திரங்கள் குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மோசடிக் கும்பல், தொடர்பு அமைச்சின் அதிகாரிகளின் முழு பெயர், பதவி, தொலைபேசி எண் போன்ற விபரங்களை அமைச்சின் இணையதளத்திலிருந்து பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

“இதில் அழைப்பைப் பெற்ற பொதுமக்கள் அமைச்சுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு விபரங்களை சரிபார்த்துள்ளனர். இறுதியாக அவர்கள் பெற்ற அழைப்புகள் அமைச்சிடமிருந்து இல்லை என்பது உறுதிபடுத்தபட்டது. மோசடி செய்பவர்கள் ‘ஆள்மாறாட்ட யுக்திகளைப் பயன்படுத்துகிறார்கள். அதுதான் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்” என்றார்.

கூலாய், பெங்குலு முகிம் செடெனாக் வளாகத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் நன்கொடை நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ இவ்வாறு தெரிவித்தார்.

பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் அமைச்சின் இரண்டு அதிகாரிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி மோசடி, போலி முதலீடுகள் மற்றும் சூதாட்டம் தொடர்பான 35,500 சமூக ஊடகத் தள இடுகைகள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“அந்த எண்ணிக்கையில், 28,513 சூதாட்ட நடவடிக்கைகளும், மீதம் 6,987 முதலீடு மற்றும் ஆள்மாறாட்டத்தை உட்படுத்தியது. இதில் நிதி சார்ந்த கூறுகள் இருந்தால், அதனை பொதுமக்கள் முதலில் சரிபார்க்கக் கோரி நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்று அவர் கூறினார்.