spot_img
6.4 C
London
spot_img
Home சமூகம் 24 மணிநேர உணவக உரிமத்தை ரத்து செய்வதா?பிரெஸ்மா நிராகரிப்பு! -டத்தோ ஹாஜி ஜவஹர் அலி

24 மணிநேர உணவக உரிமத்தை ரத்து செய்வதா?பிரெஸ்மா நிராகரிப்பு! -டத்தோ ஹாஜி ஜவஹர் அலி

0
249

கோலாலம்பூர், ஏப்.23-

நாட்டில் 24 மணி நேரம் இயங்கும் உணவகங்களுக்கான உரிமத்தை ரத்து செய்யும் பரிந்துரையை பிரெஸ்மா நிராகரித்துள்ளது.

இந்த பரிந்துரையை தாங்கள் நிராகரிப்பதாக பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி திட்டவட்டமாக தெரிவித்தார்.

24 மணி நேர உணவகங்கள் உடல் எடை அதிகரிப்பு, உறக்கமின்மை, இரவு வேளை உணவு பழக்கம் போன்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறியது.

தேவை, இடம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப உணவக உரிமையாளர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினரின் தேவையைப் பூர்த்திச் செய்வதற்கு 24 மணிநேர உணவகங்கள் அவசியம் என்றார் அவர்.

நாடு முழுவதும் உள்ள உணவக உரிமையாளர்களின் வர்த்தக அடைவுநிலை அடிப்படையில் 24 மணிநேர உணவகங்கள் செயல்படுவதற்கான அனுமதியைப் பரிசீலனை செய்யும்படி இதற்கு முன்பு பிரெஸ்மாவும் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்திருப்பதாக அவர் சொன்னார்.

மக்களின் உடல் ஆரோக்கிய பிரச்சனைக்கு 24 மணிநேர உணவகங்கள் காரணமல்ல. மாறாக தனிப்பட்ட நபரின் உடல் ஆரோக்கிய அமலாக்க முறையும் ஒரு காரணமாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

-எஃப்.எம்.டி.