கோலாலம்பூர், அக்.4 –
ஆப்பிள் விவேக கைத்தொலைப்பேசி பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளாஸ் விவேக கைத் தொலைப்பேசிகள் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கி மலேசிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மலேசியாவுக்கான ஐபோன் 8, ஐபோன் 8 பிளாசின் விலை இந்த செய்தி பதிவேற்றம் செய்யப்படும் வரையில் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்காவில் ஐபோன் 8 , 699 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும் வேளையில் ஐபோன் 8 பிளாஸ், 799 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளாஸ் கைத் தொலைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் வெளியிட்டார். இந்தை கைத் தொலைப்பேசியில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி உள்ளது.
மேலும் 4கே தொழிற்நுட்பத்தின் கூடிய டி.வி, எல்.டி.இ. வசதியுடன் கூடிய வாட்ச், உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன. கவர்ச்சிகரமான வண்ணங்களுடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகியவை முறையே 4.7-அங்குல மற்றும் 5.5 அங்குல அளவுகள் உள்ளது