வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அன்வாரே பிரதமர் – துன் மகாதீர்
முதன்மைச் செய்திகள்

அன்வாரே பிரதமர் – துன் மகாதீர்

புத்ரா ஜெயா, ஜூலை 18-

மக்கள் விரும்பினால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மை தாம் பிரதமராக ஏற்றுக் கொள்வதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.  மக்கள் விரும்பினால் அதில் தமக்கு ஆட்சேபனை இல்லையென தமது பெர்டானா தலைமைத்துவ அறவாரிய தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை அவர் அவ்வாறு தெரிவித்தார்.

பிரதமராவதற்கு தாம் அன்வாரை ஆதரிக்க வில்லை என்ற அவரின் செய்தி மூன்று நாள்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் பத்திரிகையான தெ கார்டியனில் வெளிவந்த பின்னர், அவர் இதனை அறிவித்தார். அன்வார் பிரதமராக முடியாது ஏனெனில், அவர் முதலில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

1998இல் அவர்களிவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, அப்போது தமது துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராஹிம் ஓரினப் புணர்ச்சி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர் பிரதமராக ஆவதற்குத் தகுதியற்றவர் என மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.  அந்த நிலைப்பாட்டை இன்னும் மகாதீர் கொண்டிருக்கிறாரா என்ற கேள்விக்கு அவர், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிலைப்பாடு மாறும் என்றும் அடுத்தாண்டு தமது எண்ணத்தை மாற்றியும் கொள்ளலாம் என்றும் அதனைப் பொறுத்திருந்து பார்க்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் வேட்பாளர் பற்றிப் பேசும்போது, அது தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் ரகசியமாக வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். சரியான நேரம் வரும்போது அதனை அறிவிப்பதாகவும். அது இப்போது, தேர்தல் நடப்பதற்கு முன்னதாக அல்லது தேர்தல் முடிந்த பின்னரும் கூட இருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன