தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சுழற்கிண்ணச் சிலம்பப் போட்டி

 

கோலாலம்பூர்:

மஇகா, எம்ஐடி விளையாட்டுப் பிரிவு – மலேசியச் சிலம்பக் கழகம் இணைந்து முதல் முறையாகத் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சுழற்கிண்ணச் சிலம்பப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

இப்போட்டி கெடா, லுனாஸிலுள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் செப்டம்பர் 13 முதல் 15 வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டியை மஇகா தலைவர் தான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் செப்டம்பர் 14-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.

இளைஞர்கள் அதிக அளவில் சிலம்பப் போட்டிகளில் ஈடுபட வேண்டும் என்று MIED–MIC தேசிய விளையாட்டு பிரிவு செயலாளர் அர்விந்த் தனபாலன் கேட்டுக் கொண்டார்.

மேலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிலம்பம் கற்க அனுப்புவதன் மூலம் பாரம்பரியக் கலை என்றும் நிலைத்து நிற்கும் என்றார்.

மேலும், இப்போட்டியில் தங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் இதில் வெற்றி பெறும் போட்டியாளர்களைச் சுக்மா போட்டிக்குத் தேர்வு செய்யப்படலாம் என்றும் மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.

இப்போட்டியில் 12 மாநிலஙிலிருந்து சுமார் 300 போட்டியாளர்கள் தங்களின் வயது, எடை ஆகியவற்றுக்கு ஏற்ற பிரிவில் கலந்து கொள்ளவுள்ளதை சுரேஷ் உறுதிப்படுத்தினார்.

வெற்றியாளருக்குப் பதக்கமும் ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடும் மாநிலத்திற்கு சுழற்கிண்ணம் வழங்கப்படும் என்று MIED–MIC தேசிய விளையாட்டு பிரிவு செயலாளர் அர்விந்த் தனபாலன் கேட்டுக் கொண்டார்.

  • அஸ்வினி செந்தாமரை