கோலாலம்பூர்:
Real Jockeys ஏற்பாட்டில் செந்தோசா சட்டமன்றத் தொகுதி மக்கள் சேவை மையத்தின் ஆதரவில் Beat Thalaivan – தேசிய அளவிலான டிஜே போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் பங்கேற்பாளர்கள் இப்போட்டி பதிவு செய்ய தொடங்கலாம் என்று செந்தோசா சட்டமன்றத் தலைவர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
பங்கேற்பாளர்களுக்கு 12,000 வெள்ளிக்கு மேற்பட்ட பரிசுத் தொகைகளை வெல்ல வாய்ப்புள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
நாட்டில் இளம் தலைமுறையினர் டிஜே துறையில் அதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அவர்களின் திறமைக்கு ஓர் அங்கீகாரம் வழங்கும் நோக்கில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்போட்டியின் நேர்முகத் தேர்வு செப்டம்பரில் நடைபெறவுள்ள நிலையில் அரையிறுதி சுற்று அக்டோபர் 10-இல் நடைபெறவுள்ளது.
மாபெரும் இறுதிச்சுற்று புக்கிட் ஜாலில் கார்பார்க்கில் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தி பரிசுத் தொகையை வெள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.