டாமான்சாரா, செப். 17-

உள்ளூர் இசை கலைஞர்களின் ஒரு படை ஹிப்போப் இசை தொகுப்பு அதிகாரப்பூர்வமாக வெளியீடு காணவுள்ளது. இந்த இசை தொகுப்பில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Authorities Music Group வழங்கும் இந்த இசை தொகுப்பில் Elfcfer, Pranav, Thivagar, Sharvien, Hayrold ஆகியோர் பாடியுள்ளனர்.

தமிழ் ஹிப்போப் இசையை மையப்படுத்தி இப்பாடல்கள் அமைந்துள்ளதாக இதற்கு பின்புலமாகச் செயல்பட்டுள்ள பாடகர் திவாகர் தெரிவித்தார்.

ஒவ்வொரு பாடல்கள் அதன் தனித்துவத்தைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்பாடல்கள் அனைத்தும் யாரையும் சாடும் வகையில் உருவாக்கப்படவில்லை என்றும் பாடகர் ஷர்வின் உறுதிப்படுத்தினார்.

MyCreative Ventures Group & தகவல் அமைச்சகம் ஆதரவோடு இந்த இசை தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சி செப்டம்பர் 27-ஆம் தேதி Hyperspace KL, Level 13, Wisma Trax, Kuala Lumpur-இல் மாலை 8 முதல் நடைபெறவுள்ளது.