புக்கிட் ஜாலில்:
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று பேவிலியன் புக்கிட் ஜாலிலில் உள்ள திஜிவி திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
மலேசியாவில் இத்திரைப்படத்தை வீடு தயாரிப்பு நிறுவனமும் ஏரா ஸ்டுடியோஸும் இணைந்து வெளியிட்டது.
மலேசியாவில் ‘மாஸ்க்’ திரைப்படத்தை வெளியிடுவது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ரசிகர்கள் திரைப்படைத்தை ரசித்து, நல்ல வரவேற்பு தருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக வீடு தயாரிப்பு நிறுவனத்தின் தோற்றுநர் டெனிஸ் குமார் கூறினார்.
உள்ளூர் தயாரிப்பாளர்கள் இணைந்து தமிழ் திரைப்படங்களை வெளியிடுவது, மலேசிய தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை உருவாக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இந்தச் சிறப்பு காட்சியில் ரசிகர்கள், ஊடகவியலாளர்கள், திரைப்படப் பிரபலங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாஸ்க் திரைப்பட முன்னோட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் கவின் மற்றும் ஆண்ட்ரியாவின் திரைப்பரிமாணம் குறித்து பெரும் ஆர்வம் காணப்பட்டது.
மேலும், நேற்றை நிகழ்ச்சியின் சிறப்பு பிரமுகராக டத்தோ டி. மோகன் கலந்து கொண்டு படத்தை வெளியீடு செய்த இரு நிறுவனத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ‘மாஸ்க்’ போன்ற வித்தியாசமான முயற்சிகள் மலேசியாவில் தமிழ் திரைப்படங்களின் வளர்ச்சிக்கு உதவும் என அவர் குறிப்பிட்டார்.
ஓர் இடத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் அதே இடத்தில் கொடுக்க வைப்பதை மையமாக வைத்து மாஸ்க் திரைப்படத்தை இயக்கியிருக்கிந்றார் இயக்குனர் விகர்ணன் அசோக்.

