சுங்கை பெசி:

தேசிய வகை சுங்கை பெசி தமிழ்ப்பள்ளியின் கட்டட மறுசீரமைப்பு பணிகள் குறித்து பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வான் அசீசாவுடன் நிச்சயம் விவாதிப்பேன் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணை தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இன்று ஏபியூ பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற தேசிய வகை சுங்கை பெசி தமிழ்ப்பள்ளியின் ‘பொன்மாலை பொழுது’ நிதி திரட்டும் விழாவைத் தொடக்கி வைத்து தனது உரையில் தெரிவித்தார்.

மாணவர்களுக்காக நூல்நிலையம் அமைப்பதற்கும் நிதி தேவைப்படுவதாகவும் அதற்காக இந்நிதி திரட்டும் விழா முன்னெடுக்கப்பட்டதாகப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பாமா வடிவேலு கூறினார்.

மேலும், இப்பள்ளிக்கு RM 5000 நிதியுதவி வழங்கிய டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கும், ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தலைமையாசிரியர் நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் மாணவர்களும் முன்வந்து தங்களின் பள்ளிக்கு இயன்ற உதவிகளைச் செய்யுமாறு பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், உள்ளூர் கலைஞர்களான பாடகி திலா லக்‌ஷ்மன், பென் ஜீ, மலேசிய எம்.ஜி.ஆர் & சாவித்ரி, சாரா ராமன் இசை குழுவினரும் இந்நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளை வழங்கினர்.