கோலாலம்பூர்:
மலேசியாவில் உணவகத் துறையில் இந்திய இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், நாட்டில் இந்திய உணவகத் துறை அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இன்று நடைபெற்ற மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் (PRIMAS) 25-ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
தாம் 40 ஆண்டுகளாக இந்தத் துறையில் அனுபவம் பெற்றுள்ளதாகவும் இளைஞர்கள் தங்கள் திறமையை நம்பி இத்துறையில் கால் பதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், அரசு வழங்கும் பயிற்சி மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டங்களில் பங்கேற்று தங்களை வளர்த்துக் கொள்ளலாம் என்றார்.
ஒரு சிறிய அங்காடி கடையிலிருந்து தொடங்கி, இன்று பலர் 5-நட்சத்திர உணவகத்தின் உரிமையாளராகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பொதுக்கூட்டத்தில் பல மாநிலங்களில் இருந்து வந்த சங்க உறுப்பினர்கள் பங்கேற்று, உணவகத் துறையின் சவால்கள், புதிய வாய்ப்புகள் மற்றும் அரசு ஒத்துழைப்பின் அவசியம் குறித்து கலந்துரையாடினர்.