செய்தி:
ஷா ஆலாம் TSR சினிமாவில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் AS Wonder Film தயாரிப்பில் உருவான “காளி கருப்பு” இசை காணொலி அறிமுகம் செய்யப்பட்டது.
இசை, வரிகள் மற்றும் தொகுப்பை அமிகோ சுகு மேற்கொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற தயாரிப்பு பணிகள் முடிவடைந்து, இப்போது ரசிகர்கள் பார்வைக்கு வந்துள்ளது.
நாடறிந்த கலைஞர் உமாகாந்தன் இயக்கிய இந்த இசை காணொலி, அம்மனின் மகிமையையும் ஆன்மீக சக்தியையும் வெளிப்படுத்துகிறது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மலேசிய இந்திய முன்னேற்றக் கட்சி (MIBP) தலைவர் புனிதன் பரம்சிவம், இந்த இசை காணொலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
தயாரிப்பாளர் டாக்டர் சஸ்வின் தெரிவித்ததாவது, “அம்மனின் அருளால் உருவான இந்த படைப்பு, மனிதர்களின் நம்பிக்கை மற்றும் பக்தியை பிரதிபலிக்கிறது. ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும் எங்களுக்குப் பெரும் ஊக்கம் அளிக்கிறது,” என்றார்.
இப்போது யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள “காளி கருப்பு” இசை காணொலி, வெளியீட்டுக்குப் பின் குறுகிய நேரத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.